பாகம் 1 – பல் வலி

கடுமையான பல்வலியை அனுபவித்தவர்களுக்கு புரியும் , அது உங்கள் அன்றாட வேலையில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படத்தும் என்று .அதோடு அல்லாமல் அடுத்து எப்பொழுது வலி வரும் என்ற பயத்தையும் தந்து விடுகிறது . பல் வலி என்பது( நாக்டர்னால் பெய்ன்) என்று சொல்லப்படும் இரவு நேரத்தில் அதிக வலியை தரக்கூடிய வகையை சேர்ந்தது. மேலும் இரவு நேரத்தில் அவசரமாக பல் சிகிச்சை பெறுவது கடினமான காரியம். பல் வலிக்கான பொதுவான காரணங்களையும் அதை நீங்கள் எப்படி கையாளலாம் என்பதையும் பார்ப்போம்.

பல் சொத்தை எவ்வாறு ஏற்படுகிறது?

பல் வலி வருவதற்கு மிக முக்கியமான காரணம் பல் சொத்தை. ஒட்டும் தன்மை கொண்ட உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்குழி எளிதில் உருவாகிவிடும். அது மட்டும் இல்லாமல் விரைவில் பெரிய குழியாக மாறி அருகில் உள்ள பற்களையும் பாதிக்கிறது. அதிக பாதிப்புக்கு உள்ளான பல் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ சாப்பிடும் போது பல் கூச்சத்தை தருகிறது. மேற்கொண்டு கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் பல் வலி, வீக்கம் ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக பல் அடைப்பதன் மூலம் பல் குழியையும் அதனை தொடர்ந்து வரும் பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.      

 

பல் சொத்தையை ஏற்படுத்தும் காரணிகள் .

  1.பலவீனமான இடம் – பற்களுக்கு இடையில் இடைவெளி , பிளவு , ஞானப்பல் அல்லது, பல் வரிசையில் இல்லாமல் இருப்பது .

2.கார்போஹைட்ரெட் -மிட்டாய்கள் , சாக்லேட் , உருளைக்கிழங்கு சிப்ஸ் , கார்ண்ப்பிளக்ஸ், கேக் , பழச்சாறு ,(Pepsi,coke,milk shake) போன்ற பானங்கள்.

3.கிருமிகள் – (streptococus mutans) என்கிற கிருமி மற்றும் இதை போன்ற மற்ற  கிருமிகள் .

இந்த அணைத்து காரணிகளும் சேர்ந்து பற்களை பாதிக்கக்கூடும்.பெரியவர்களை விட குழந்தைகளின் பற்கள் என்றால் பாதிப்பு விரைவில் ஏற்படுகிறது.

    பல் சொத்தையினால் ஏற்படும் வலிக்கான தீர்வு.

பொதுவாக வலி நிவாரணி மற்றும் (Antibiotic) மாத்திரையும் எடுத்துகொண்டால் பல்வலி கட்டுப்பட வாய்ப்பு உண்டு , ஆனால் மாத்திரை எடுத்துக்கொள்வது நிரந்தர தீர்வாகாது.தொடர்ந்து வலி நிவாரணி சாப்பிடுவதால் மற்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பல் வழியை கட்டுப்படுத்தி முழுமையாக குணமடைய உங்கள் பல் மருத்துவர் பல் அடைத்தல் ,வேர்சிகிச்சை ,அல்லது பல் எடுத்தல் ஆகிய சிகிச்சைகளில் உங்களுக்கு பொருத்தமானதை பரிந்துரைப்பார்.     

சொத்தை/ பல்குழியிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?            

  • பல் அடைப்பதன் மூலம் பல்குழி/ பல் பிளவிலிருந்து பலவீனமான பற்களை காத்துக்கொள்ளலாம்.
  • சர்க்கரை மற்றும் ஒட்டக்கூடிய இனிப்பான உணவு பொருட்களை தவிர்க்கவும்.                
  • தினமும் இரு முறை பல்தேய்த்து ,பிளாசிங் (FLOSSING) போன்ற பல் சுத்தம் செய்யும் நூலை பயன்படுத்துவதன் மூலம் இரு பற்களுக்கு நடுவே பல் சொத்தை வருவதை தடுக்கலாம்.
  • ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்கள் பல் மருத்துவரை அணுகுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.   

முகப்பேரில் உள்ள எங்கள் டென்டிக்கேர் பல் மருத்துவமனையில் பல் கூச்சம் வேர்சிகிச்சை போன்ற அணைத்து சிகிச்சைகளையும் அதிநவீன முறையில் செய்யும் வசதி உள்ளது. உங்களுக்கு சிகிச்சை குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் எங்களை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Keep Smiling & Stay Happy

Dr. Gnanaraj Jayabal
Dental & Implant Surgeon
Denticare Chennai
Mogappair – 9841100500

Leave a Comment